Anaathaiyaai Nirkiraen Lyrics

அனாதையாய் நிற்கின்றேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அனாதையாய் நிற்கிறேன் வேறு யாரும் துணையில்லை
நாதியற்று கிடக்கிறேன் வேறு யாரும் எனக்கில்லை
என் தகப்பனே என் இயேசுவே என் தாய்க்கும் மேலாய்
உம்மை நினைப்பேன் – அனாதையாய்
1.இந்த உலகிலே தனித்தே வாழ்கிறேன்
கண் இமைக்ககூட தூக்கத்தை விரும்பல
பசியும் கூடதான் எனக்கும் எடுக்கல
சீரும் கூடத்தான் பெலவீனமானதே -2 – என் தகப்பனே
2.எந்தன் வாழ்விலே பரிகாசம் போலானேன்
எந்தன் வாழ்விலே நிம்மதியாய் நான் இழந்தேன்
கண்ணீரை துடைக்கவும் யாரும் இல்லை
ஏனென்று கேட்கவும் ஆளே இல்லை -2 – என் தகப்பனே
3.பயப்படாதே உன்னை பாதுகாப்பேன்
வல கரத்தாலே உன்னை தாங்கிடுவேன்
அனாதை இல்லை நீ உன் தகப்பன் நான்
திக்கற்றவன் இல்லை நீ என் சொந்தமே -2