Anbar Anbai Yaaral Kooralam

அன்பர் அன்பை யாரால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பர் அன்பை யாரால் கூறலாம் – ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!
அனுபல்லவி
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய்க் கூற யாரால் கூடும்! – அன்பர்
சரணங்கள்
1. எல்லா ஜலமும் மையானாலுமே – அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு – அன்பர்
2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் – ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம் மன்னர் இயேசுவின் மகத்துவநேசம்! – அன்பர்
3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் – ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! – அன்பர்
4.எந்தன் நேசர் என்னை மீட்கவே ஏழை ரூபமாய்
இந்த லோகில் வந்த பின்னுமே பாவம் நீக்க சாபமாகி
சிலுவையிலே மாண்டதினால் ஜீவன் தந்து சிங்காரித்து
சிறந்த விண்ணோன் ஆக்கின என் – அன்பர்
5.அன்பின் ஆத்ம அபிஷேக மளித்து இன்ப நதியினால்
எந்தன் உள்ளம் நிரம்பி வழியும் அன்பின் பெருக்கில்
நீந்திக் களிக்க இன்ப உறவால் நேசித்த என் இன்பமான
அன்பினுக்காய் என்ன பதில் ஏழை செய்குவேன் – அன்பர்