Anbe En Aaruyirae song lyrics

அன்பே என் ஆருயிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பே என் ஆருயிரே
நேசர் என் கண்மணியே – 2
உமதன்பிலே நான் மூழ்கினேன்
என் இயேசுவே என் உயிர் இயேசுவே
மணவாளனே என் இயேசுவே
பூந்தோட்டமே பூ கூட்டமே
தேனோடு பால் சேர்த்து
கலந்து ஊற்றிடும் தாய் போல
என்னை தெற்றிடுமே – 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே
மண்வாசமே மழை சாரலே
பணி தூவிடும் அதிகாலையில்
ஒளி வீசும் கதிராக முகம் காட்டியே
எனதாசை தனை தேற்றிடும் – 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே
உயிர் வானமே வான் வெள்ளியே
துயர் நீக்கும் என் தெய்வமே
உமக்காக என் வாழ்வைத் தந்துவிட்டேன்
அமுதே என் கண்மலையே – 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே