anbin andavar varugai

அன்பின் ஆண்டவர் வருகை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் ஆண்டவர் வருகை வேகம் நெருங்குதே
ஆத்தும ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே
அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர்
ஆயிரம் ஆயிரமாய் நாம்முன் காணுதே
அரியாதவர் போல அமைதியாக இருந்தாலோ
ஆக்கினை நம்மேல் வந்திடும் வேகம் வேகமே
நோவாவின் காலம் போலவே மக்கள்
விற்பதும் கொள்வதுமாகவே இன்றே
ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார்
ஆவன செய்வீர் அதற்க்காய் வேகம் வேகமே
கெர்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான்
யார் யாரே விளங்கலாமோ என்று நிற்கிறான்
அவன் தனது வலையில் சேர்க்கும் லோக மாந்தரை
அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே
அந்தகாரத்தின் நாள் நெருங்குமுன்
அண்டிக்கொள் அன்பரின் இன்ப கரத்தை
என்று நாம் கூறியே அவருக்காய் மக்களை
ஆயத்தபடுத்திடுவோம் வேகம் வேகமே