Anbin Natha Enakentru

அன்பின் நாதா எனக்கென்று
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் நாதா எனக்கென்று
ஒன்றையும் நான் விரும்பவில்லை
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் ஏழைக்காக -2
பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே
பாதி வாழ்க்கை கடந்ததையோ
மீதி வாழ்க்கை யாருக்காக
நீதி நாதா உம் மகிமைக்கல்லோ -2
நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர் ஏனோ என்னை
அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே இல்லா ஏழை என் மேல்
உம் இதய பாரம் தாரும்
உம்மைப்போல என்னை மாற்றும்
எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம் என்றும் மகிழ வேண்டும்
நன்றி கெட்ட நீசன் என்னை
நம்பித் தந்தீர் உந்தன் பணி
நாதா இனி எனக்கல்ல
உந்தனுக்கே வாழுவேன் நான்
உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன்
எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
உந்தன் பணி சேவைக்கல்லோ