Anbitho Anbitho Ennai

அன்பிதோ அன்பிதோ என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே
சரணங்கள்
1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ
2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ
3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ
4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே! – அன்பிதோ
5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும் – அன்பிதோ
அன்பிதோ அன்பிதோ என்னை பாடல் வரிகள், Anbitho Anbitho Ennai lyrics