Anbu Balagan Yesu piranthaar

அன்பு பாலகன் இயேசு பிறந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார்
அன்பு பாலகன் இயேசு பிறந்தார்
அன்பாய் அவனியில் அவதரித்தார் -நாம்
அகமகிழ்ந்து ஆர்ப்பரித்து
அன்பர் பிறப்பை அறிவிப்போமே. . . . . !
அன்பர் பிறப்பை அறிவிப்போமே.
Wish you a Happy Happy Happy Christmas
Merry Merry Christmas to all.-2 – அன்பு பாலகன்
கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்
கீதம் பாடி வாழ்த்துவோம் -2
கிருபைகள் பெருகிடவே.
கிறிஸ்தேசுவை போற்றிடுவோம் -2
உன்னதத்தின் தேவ மகிமையை
உந்தனுக்காய் தேவன் தந்தார் -2
உன்னதரின் புகழை என்றும்… நாமும்
உயர்த்தியே வாழ்த்திடுவோம் -2
பாவமில்ல இயேசு பாலகன்
பரிசுத்தராய் வந்துதித்தார் -2
பாவ சாபங்களை போக்கியே
பரிகாரியை போற்றிடுவோம்-2