angkalappa thiriyura manusha— nee

அங்களாப்பா திரியுற மனுஷா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அங்களாப்பா திரியுற மனுஷா— நீ
உல்லாசமா வாழுற மனுஷா—2
நாளை நடப்பதென்ன தெரியாது உனக்கு—2 உன்
இதயத்த தந்திடு இயேசுவுக்கு—2
1.ராப்பகலா தூங்காம சொத்து சேக்குற
விதவிதமா ஆடையில மினிக்கி திரியுற
பீரு பிராந்தி சாராயத்த ஊத்தி குடிக்கிற
தன்னை மறந்து போதையில தினமும் மிதக்குற
ஹலோ தம்பி பாலு நான் சொல்லுறத கேளு
உன்னை மீட்க இயேசு தான் சூப்பர் ஆளு—2
2.பணத்து மேல பணத்த அடிக்கி பூட்டி வைக்கிற
வங்கிக் கணக்கு குறையாம கூட்டி பாக்குற
M.A B.A பட்டங்கள வாங்கிக் குவிக்கிற
வாழ்க்கையில நிம்மதி இல்ல ஏங்கி தவிக்கிற
ஹலோ மிஸ்டர் பாஸ்சு நீ இயேசுவோடு பேசு
உன்ன விட்டு ஓடிடுவா பிசாசு—2
3.பயணம் பண்ணும் போது நமக்கு விபத்து நடக்கலாம்
இராத்திரியில் தூங்கும் போது ஆபத்து நெருங்கலா
சொந்த ஜனங்க கூட உன்ன தள்ளிப் போகலாம்—2
இரத்த உறவு கூட நம்மை ஒத்திப் போகலா
மரணம் வரும்போது உன்னை காப்பதாரு
ஜீவனுள்ள தேவன் இயேசு எண்ணி பாரு—2