ani aniyay aalayaththil

அணி அணியாய் ஆலயத்தில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அணி அணியாய் ஆலயத்தில்
பணிவுடனே நாம் செல்வோம்
ஆண்டவராம் இயேசுவிலே திருப்பலி கொண்டாடுவோம் – 2
மனிதம் மலரச் செய்வோம் புனிதம் அடைய முயல்வோம் – 2
அணி அணியாய் ஆலயத்தில்
பணிவுடனே நாம் செல்வோம்
ஆண்டவராம் இயேசுவிலே திருப்பலி கொண்டாடுவோம்
1. பிளவுகளை வேரறுப்போம் ஒரே உள்ளமாய் வழிபடுவோம் – 2
அன்பை பகிர்வோம் பலியெனத் தருவோம்
பகிர்வை காட்டுவோம் உறவை வளர்ப்போம்
இறையாட்சியை நனவாக்கவே இறைசாட்சியாய் வாழவே – 2
அணி அணியாய் ஆலயத்தில்
பணிவுடனே நாம் செல்வோம்
ஆண்டவராம் இயேசுவிலே திருப்பலி கொண்டாடுவோம்
2. உரிமைகளை மதித்திடுவோம் நீதி உண்மையை காத்திடுவோம் – 2
நற்செயல் புரிவோம் சாட்சியம் பகர்வோம்
இயேசுவை அறிவோம் அவரை அறிவிப்போம்
நிறை வாழ்வினை நமதக்கவே இறை செய்தியாய் மாறவே – 2
அணி அணியாய் ஆலயத்தில்
பணிவுடனே நாம் செல்வோம்
ஆண்டவராம் இயேசுவிலே திருப்பலி கொண்டாடுவோம் – 2