anpe! anpe! anpe! aaruyir urave

அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!
1.ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா.
2.அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே.
3.பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா.
4.பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரி லன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ?
5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!
4.விடுத்தீரே நீர் விண்ணுலகத்தை,
எடுத்தீரே மா ஏழையின் கோலம்;
கொடுத்தீரே உயிரை-எனக்காய்
அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே பாடல் வரிகள், Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics