anpe anpe uyarnthathu irai

அன்பே அன்பே உயர்ந்தது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பே அன்பே உயர்ந்தது இறை
அன்பே உலகில் சிறந்தது (2)
அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த
அவர் அன்பே உலகில் சிறந்தது – 2
1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி
அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி (2)
அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் – 2
2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து
கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே (2)
அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் – 2