anpe katavul enral anpukku eetethu sol

அன்பே கடவுள் என்றால்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா
அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா
மலை பெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா
உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா
நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா
அன்பே கடவுள் என்றால் பாடல் வரிகள், Anbe Kadavul Endraal Lyrics