anpin azhake arulin urave

அன்பின் அழகே அருளின் உறவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பின் அழகே அருளின் உறவே
கொடையின் வள்ளலே கொஞ்சும் தாயே – (2)
வரம் தேடி உனை நாடி வருவோர்கள் பலகோடி
எம் வாழ்வின் அணையாத சுடராக வருவாய் நீயே – (2 )
சொல்லில் மொழியே கவிதை துளியே
சொல்ல இயலா வான்புகழே – (2 )
1.சுமைகள் தாங்காது இதயம் உன்னை
அழைக்குதே துணையே
துயர்கள் இல்லாது எனை விட்டு மறைய
அணைக்குதுன் கரமே-2
கரையாத மனமும் கரையும் உன் அன்பில்
தீராத துயரமும் தீரும் உன் அருளில்-2
மாறாத மகிமையின் தூய மலரே
அழகே அன்பின் ஆருயிரே
மரியே எங்கள் மாதவமே -(2 )
2.பரிவு பார்வையால் பரிந்துரை பேசும்
தாய் முகம் உனதே
நில்லாமல் மோதும் அலைகள் போல
ஆசீர் தருபவளே -(2 )
விண்ணக வாழ்வின் வழித்துணை நீயே
மண்ணகம் வாழ்ந்திட வரம் தரும் உறவே – (2 )
மாறாத மகிமையின் தூய மலரே
அழகே அன்பின் ஆருயிரே
மரியே எங்கள் மாதவமே-2
அன்பின் அழகே அருளின் உறவே பாடல் வரிகள், Anbin Azhage Arulin Uravae Lyrics