anpin paliyay erpay – Anbin Paliyaai Yearpaai

அன்பின் பலியாய் ஏற்பாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பின் பலியாய் ஏற்பாய் – Anbin Paliyaai Yearpaai
அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
அன்பின் பலியாய் ஏற்பாய்
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமை
புண்ணிய வாழ்வில் நிலைபெற செய்வாய்
வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம்
முழு முதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – எமை
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
படைப்பின் மீதே பரிவிருக்க – அந்த
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க – உனில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க