anpu mozhi pesum aantavare

அன்பு மொழி பேசும் ஆண்டவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பு மொழி பேசும் ஆண்டவரே
இன்பம் எனக்கு நீரே ஆண்டவரே
துன்பம் என்னை சூழ வரும்போது
அடைக்கலம் தருகின்ற ஆண்டவரே
கணநேரம் கூட பிரியாமல் உன்னை நிழலாக தொடர்வேன் ஆண்டவரே
என்னை பாதுகாத்திடும் ஆண்டவரே
உந்தன் பாதை நடத்திடும் ஆண்டவரே
(1)தாயின் கருவில் தெரிந்தவரே
கரங்கள் பிடித்து நடப்பவரே
உறவுகள் என்னை மறந்தாலும்
உயிருக்குள் உறவென கலந்தவரே
உலகமே என்னை வெறுத்தாலும்
உம் சிறகுகள் நிழலில் காப்பவரே
உணர்ந்திடு செயல்படு என சொல்லி
நிம்மதி வாழ்வினை தருபவரே
(2)அடிமையின் விலங்கினை உடைத்தவரே
விடுதலை வாழ்வினை தருபவரே
உம் வார்த்தையை எனது வாழ்வாக்கி
பகைவரை மன்னிக்க செய்தவரே…என் கண்ணீர் கவலைகள் யாவையுமே
பனியைபோல் விலகிட செய்பவரே
ஜெபத்தினால் என்னுடன் பேசு என்று
இறை நம்பிக்கையினை தந்தவரே
அன்பு மொழி பேசும் ஆண்டவரே பாடல் வரிகள், Anbu Mozhi pesum Aandavarae Lyrics