anpukkakath thaviththen thutiththen

அன்புக்காகத் தவித்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்புக்காகத் தவித்தேன் துடித்தேன்
பேர் சொல்லி அழைத்தீரே
அன்பு நதியினாலே
என் தாகம் தீர்த்தவரே
தேற்றும் விரலினாலே
தொட்டே சுகம் தருவீரே
உங்க ஒற்றை வார்த்தை போதுமே
என் கவலை யாவும் தீருமே
இயேசுவே.. .என் ஜீவனே.. .
உம்மையே ஆராதிப்பேன்
1.வானம் போல விரிந்த உம் கிருபை
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்ததே
உண்மை அன்பை என் இதயம் கண்டதே
உலகம் தந்ததில்லை இந்த நிம்மதி
2.வழிகளில் நான் விழுந்தெழும்போது
அணைக்கும் தேவ பாசத்தை
நெஞ்சம் சொல்லுதே
அழாதே என்று உம் வசனம் பேசுமே
மார்பில் சாய்கிறேன் நீரே என் நிம்மதி
3.சொந்தம் என்று சொல்லிக்க நீர் இருக்க
ஏங்கித் தவிக்க ஏழைக்கு தேவை ஏதுமில்ல
இந்த உறவை என் உள்ளம் ருசித்ததே
சொந்தமானதே உம்மால் என் நிம்மதி
அன்புக்காகத் தவித்தேன் பாடல் வரிகள், Anbukaga Thavithen lyrics