apishekam seythu vaiththare – Abisheham Vaithu Vaitharae

அபிஷேகம் செய்து வைத்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அபிஷேகம் செய்து வைத்தாரே – Abisheham Vaithu Vaitharae
பல்லவி
அபிஷேகஞ் செய்துவைத்தாரே-குருமார்கூடி;
அன்பு கொண்டாடினாரே.
அனுபல்லவி
ஜெபதப சிந்தையார,- ‘அபசாரம் யாதுந் தீர,
தேவதூதர்கள் பாட, – கோவிலிற் பலர் கூட,
சரணங்கள்
1.திரள், திரளாகச் சேர்ந்த-ஜனங்கள் கண்டுமகிழத் ‘
திவ்யவா ரணமுறைச் செயல்கள் பல-நிகழ,
அருளணி யன்பமைந்தோர்-அருகினின்று புகழ,
அஞ்ஞானத் ‘திமிரம்போக்-‘கருண னீயாவையென்று
2.ஆன மந்தையை மேய்க்கும்-அருளார் கோனானீயாவை,
அகிலத்தாரேற்றிப் போற்றும்-அழகிய தீபம்போல் வை,
வானமிருந்துவரு-மாவி வதிய வாழ்வை,
மாசணுகாத வாசீர்-வாதம் பெறுவை யென்று
3.வலக்கரங் கொருத்துநன்-மந்தையை வொப்படைத்து,
வகைவகை செய்கடமை-வகுத்து வகுத்துரைத்து,
கலக்கமில் லாமலதைக்-காத்துப் புன்மேய்ச்சல்காட்டி
காலந்தொறுஞ் சுனைநீர் – காதலா யூட்டென்று
4.அன்பார் நாயகியுடன்-அன்யோன்யமாக வாழும்
ஆசை நாயகன்போல,-அங்கத்தாருடன் சேர்ந்து
துன்பம் நெருங்கி யென்ன-துயரம் வளைந்துமென்ன
துன்னு சரடூசிபோற்-றுலங்க வாழ்த்தியென்று
5.கரங்கள் சிரத்தில் வைத்து, – கண்ணிலானந்த பாஷ்பம்
கசிந்து வழியநின்று,-கர்த்தா விப்பத்தற்கின்று
சுரந்தாவி மழைபோலச்- சொரியுஞ் சொரியுமென்று
சோபனஞ் சொல்லித்தேற்றி,- தொடர்பாய்ப் பிரார்த்தித்தேத்தி