appa enru ummaiththane

அப்பா என்று உம்மைத்தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா என்று உம்மைத்தானே
தேடி வந்தேன் ஓடி வந்தேன்
தாய்போல தேற்றி தந்தை போல காத்து
வழுவாமல் நடத்துகிறீர்
அனுபல்லவி:
முள் பாதையில் நடக்கும்போது
தோள்மீதிலே சுமந்தவரே
என் வாழ்க்கையில் இடறும்போது
வெளிச்சம் தந்து உயர்த்தினீரே
சரணங்கள்:
1. இயேசுவே நீங்கதான் என் நோய்கள் நீக்கிடும்
சுகமொன்றும் இல்லையே விடுதலை தாரும்
கண்ணீரிலே கதறுகிறேன் விடுதலையை தந்திடுமே
2. சிலுவையை நோக்கிப்பார் விடுதலை கிடைக்குமே
கடுகளவு விசுவாசி அற்புதம் நடக்கும்
உனக்காகவே நானே வந்தேன்
தளராமலே நம்பியே வா