appa um kankalil nanum kuzhanthaiye

அப்பா உம் கண்களில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா உம் கண்களில் நானும் குழந்தையே
அகாபே அன்பை என் மேல் வைத்த தந்தையே – 2
திசைகளின் எல்லைகளில் என் குறைகளை எரிந்தவரே
கடலின் ஆலங்களில் என் பாவம் புதைத்தாவரே
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னைத் தேடி வந்தீர்
குறைகள் நிறைந்த என்னை
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னைத் தேடி வந்தீர்
நன்றி மறந்த என்னை
1.துரோகி என்று அழைத்தவர் மத்தியில் தூக்கி சுமந்தவரே
பாவி என்று நினைத்தவர் மத்தியில் பாசம் வைத்தவாரே – 2
மகனே என்றழைத்து நம் உறவை சொன்னவரே
அப்பா என்றழைக்கா எனக்கு உரிமை தந்தவரே – அன்பரே
2.உறவுகள் என்னை வெறுத்த போதும் கை விடாதவரே
வேண்டமென்று சொன்னவர் மத்தியில் உயர்த்தி வைத்தவரே – 2
மகனே என்றழைத்து நம் உறவைச் சொன்னவரே
அப்பா என்றழைக்கா எனக்கு உரிமை தந்தவரே – அன்பரே
அன்பரே நீரே என்னை நேசித்தீர்
நீரே என்னைத் தேடி வந்தீர்
குறைகள் நிறைந்த என்னை
அன்பரே நீரே என்னைத் தேடி வந்தீர்
நீரே என்னை சேர்த்து கொண்டீர்
உம் மகனாய் என்னை சேர்த்து கொண்டீரே