appa ungka namam athu uyarvanathe

அப்பா உங்க நாமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா உங்க நாமம் அது உயர்வானதே
அப்பா உங்க நாமம் என் இனிதானதே -2
யேசுவே யேசுவே
ராஜனே என் ராஜனே -2
சிலுவை மரத்தை உம்மை சுமக்க செய்தேன்
பாவ நிந்தையை உமக்கு அளித்தேன் -2
என்னை உருவாக்கின கரத்திலே
காயமதை நான் கொடுத்தேனே -2 – யேசுவே
எனக்காய் நீர் உடைக்கப்பட்டீர்
உருக்குலைந்த ரூபமானீர்-2
நான் செய்த பாவம் நீக்கவே
உம் ரத்தம் இங்கு விலையானதே -2 – யேசுவே