appare appare soosaiyappare – Appare Appare Soosaiappare

அப்பரே அப்பரே சூசையப்பரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அப்பரே அப்பரே சூசையப்பரே – Appare Appare Soosaiappare
அப்பரே அப்பரே சூசையப்பரே
அமைதி நிறைந்த அன்பரே
அன்பு உள்ளத்தின் மாந்தரே
அன்பு உள்ளத்தின் மாந்தரே -2
1.தந்தையின் வார்த்தை செய்தார் சூசை
மரியின் கரங்களை கைப்பிடித்தார்
கண்மணிபோல் பார்த்தார் கருவினை காத்தார்
சூசையப்பர் செயலின் புனிதர்
செயலின் புனிதர் – அப்பரே
2.பாலைவன பயணம் கொண்டார் சூசை
நம்பிக்கை அவரது பாலைவன சோலை
வலிகளை சுமந்தார் துணிவு கொண்டார்
சூசையப்பர் வீரமுள்ள புனிதர்
வீரமுள்ள புனிதர் – அப்பரே
3.அமைதியின் ஞானம் பொருள்தான் சூசை
செயல்தான் அவரது மொழி ஓசை
உழைப்பின் மன்னன் இல்ல தலைவன்
சூசையப்பர் எளியோரின் புனிதர்
எளியோரின் புனிதர் – அப்பரே