appavin matiyila appavin thoolula appavin karaththula

அப்பாவின் மடியில அப்பாவின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துல
எத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2
அப்பாவின் கரத்தில நான் முத்திரை மோதிரமாய்
அப்பாவின் கரத்தில நான் அலங்கார கிரீடமாய் -2
1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதே
பிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2
இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2
இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2 – அப்பாவின்
2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்
கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2
இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2
முடிவு பரியந்தம் கூடவே இருப்பேன் என்றீர்-2 – அப்பாவின்
3.தாய் தன் பாலகனை தேற்றுவதை போல்
நாள்தோறும் கிருபையால் என்னை தேற்றுகின்றீர் -2
நன்மையும் கிருபையும் என்னை தொடர செய்தீர் -2
புழுதியில் கிடந்த என்னை உயர்த்தி வைத்தீரே -2 – அப்பாவின்