Arputha Anbithae Porparan Yesuvae song lyrics

அற்புத அன்பிதே பொற்பரன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே
பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே
உம்மைப் போற்றி ஏற்றி புகழ்ந்திடுவேன்
துதி சாற்றி ஊற்றி ஊற்றி உள்ளம் மகிழ்வேன் -2
அன்பு பெருகும் சுனை நீரல்லவோ
அம்பு விதனில் அரசே
மாறா நின் தயவும் மா நேசமதும்
மறப்பேனோ மறப்பேனோ
நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே
நடந்து சீஷரை தேற்றிய இயேசுவே
எந்தன் நாவாய் பொங்கும் அலை கடந்தே
கரை நாடி சேரத் துணை புரிவீர்
மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே
நல்குவீர் தாழ்மையும் நின் சித்தம் செய்யவே
தாரும் தூய ஆவி அனுக்கிரகமே
இன்று மீயுமென்னில் புது பெலனே
ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே
எளியோன் எனக்கோர் பங்களித்தவரே
பரிசுத்தம் நான் பெறச் செய்யுமே
சுதந்திரம் நான் பெறச் செய்யுமே
5.சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே
சிந்திக்க ஆனந்த கண்ணீர் பெருகுதே
அதை எண்ணி எண்ணி நிறைந்தன்பினால்
இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன்