arulnathar namamathil – Arul Nadhar Namamadhil

அருள்நாதர் நாமமதில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அருள்நாதர் நாமமதில் – Arul Nadhar Namamadhil
அருள்நாதர் நாமமதில்
ஒருமனமாய் உருகி
தொழுகின்ற நேரமெல்லாம்
எழும்பிடுவார் நடுவில் – நாம்
இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்
பதறாமல் அணைத்திடுவார்
நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார்
பட்சமாய் தாங்கிடுவார்