arumai ratchaga koodi ppt

அருமை ரட்சகா கூடி வந்தோம் உம

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அருமை ரட்சகா கூடி வந்தோம் உம
தன்பின் விருந்தருந்த வந்தோம்
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க
1.ஆராயும் எமதுள்ளங்களை பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூரும்
2.ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்
கோவே மா பயபக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ
3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் உமது
ஒளி முகதரிசன முற்றோம்
சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும்
4.கிருபை விருந்தின் இந்த ஐக்யம் பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே வந்தனம்
5.எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர்
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்
புண்ய நாதரே
6.பந்திக் கெசமான் நீர் யேசுவே எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய