arutperunj jothi thiru avathaaraa

அருட்பெருஞ் ஜோதி திரு அவதாரா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அருட்பெருஞ் ஜோதி திரு அவதாரா
இயேசுவே உம்மை ஸ்தோத்தரிப்பேன் -2
பரிசுத்தர் உந்தனை பாடிடுவோம்
அனுதினம் புகழ்ந்து துதித்திடுவவோம் -2
1. பாவங்கள் சுமந்து தீர்த்தவரே
எந்தன் சாபங்கள் யாவையும் மாற்றினீரே
நோய் பிணி யாவும் நீக்கிட வந்தீர்
நம்பிடும் மாந்தரை காப்பவரே
2. சோதனை வேளையில் தாங்கினீரே
என்னை தேடியே வந்து உதவி செய்தீர்
நன்மைகள் என்னை சூழ்ந்திட செய்தீர்
உந்தனை என்றென்றும் நான் மறவேன்
3. உந்தனை போலவே மாற்றிடவே
தேவா உந்தனின் சாயல் தந்தீரே
மகிமையில் சேர்த்திட வந்தவர் நீரே
மகிபனே உம்மை ஸ்தோத்தரிப்பேன்