Athigam Athigamai song lyrics

அதிகமதிகமாய் அதிகமதிகமாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய்
எந்நாளும் நேசிப்பவர் இயேசுவே
குடும்பத்திலே கோத்திர குலங்களிலே
உலகத்திலே உறவுகள் நட்புகளிலே
அதிகமதிகமாய் அதிகமதிகமாய் அதிகமதிகமாய்
எந்நாளும் நேசிப்பவர் இயேசுவே
அதற்காய் நான் என் வாழ்வை தருகிறேன்.
உம்மைத்தான் ஆராதிப்பேன்
உம் அன்பை எண்ணி அடிபணிவேன்
என் உடலை ஜீவ பலியாக
முழுவதுமாய் ஒப்புக் கொடுக்கிறேன்.
2 உம்மைத்தான் நம்பியுள்ளேன்
என் அடைக்கலமும் கோட்டையும் நீரே
என் வாழ்வின் ஜீவ நம்பிக்கை
எந்நாளும் இயேசு மாத்திரமே
உம்மைத்தான் தேடுகிறேன்
இரவு பகல் எந்நேரமுமே
என் இதயம் இதயம் ஜீவ தேவனையே
எப்பொழுதும் வாஞ்சிக்கின்றதே