Athikaalai velai, En iyesuve

அதிகாலை வேளை என் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலை வேளை, என் இயேசுவே,
உந்தன் கிருபை போதுமே -(2)
விழிக்கும் போது உம் சாயலாய்,
திருப்த்தி ஆகி முகம் மலர்ந்திடுவேன்.
1) இராக்கால வேளையில் உம் கீதங்கள்,
இதயத்தோடென்றும் உறவாடுமே -(2)
பூர்வத்தின் நாட்களை சிந்திக்கிறேன்,
பரலோக நாதனை போற்றுகிறேன் -(2) …(அதிகாலை)
2) என் தேவனே, என் இயேசுவே,
பரிசுத்தம் காண நான் வாஞ்சிக்கிறேன் -(2)
எப்போதும் உம் வார்த்தை ஜீவிப்பதால்,
இதயத்தில் எந்நாளும் வாஞ்சிக்கிறேன் -(2) …(அதிகாலை)
அதிகாலை வேளை என் இயேசுவே பாடல் வரிகள், Athikaalai Velai En Yesuvae Lyrics