athikalai vanam viyappootu kana

அதிகாலை வானம் வியப்போடு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அதிகாலை வானம் வியப்போடு காண
விண்மீன்கள் கூட்டம் வாழ்த்துக்கள் ப பாட
மன்னன் உதித்தாரே மாட்டுத்தொழுவில்-2
பாவம் போக்க பாலகனாக பாரில் வந்தாரே
பாவம் போக்க பாரில் வந்தாரே
1. வானில் தோன்றிய தூதர் பாடிய
ராகம் புதியது பாரு
விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியமுமே – மன்னன்
2.கிழக்கில் தோன்றி பாதை காட்டும்
வெள்ளி புதியது பாரு
கீழ்திசை ஞானியர் பணிந்து வணங்கினான்
பொன்னும் பொருளுடனே-மன்னன்
3.கன்னி வயிற்றில் கண்மணி
வந்திட்ட விந்தை புதியது பாரு
தீர்க்கனின் வார்த்தைகள் நிறைவேறுது
வேதம் சத்தியமே – மன்னன்
அதிகாலை வானம் வியப்போடு பாடல் வரிகள், Athikaalai Vaanam Viyapodu Lyrics