athikalai veluppaip poola

அதிகாலை வெளுப்பைப் போல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலை வெளுப்பைப் போல,
உன் வெளிச்சம் எழும்பும்.
உன் சுக வாழ்வும் கூட,
சீக்கிரம் துளிர்த்துவிடும்.
பூமியை உண்டுப்பண்ணி
வானங்கள் விரித்தவர்
வாக்கு மாறாது; – உன்
நம்பிக்கை வீண்போகாது!
1. கண்கள் காணும்படி
கஷ்டப் பாடுகள் படுபவரை
கை நீட்டித் தூக்கிவிடு,
தோள் கொடுத்து உயர்த்திவிடு!
செழிப்பானத் தோட்டமாய்
வற்றாத நீரூற்றாய்
திருப்தியாய் ஆத்துமா,
மகா வறட்சியில் வாழ்ந்திடும்! – அதிகாலை
2. பட்டினிக் கிடப்போருக்கு
ஆகாரம் பகிர்ந்திடனும்;
உடுத்திட இல்லையென்றால்,
உடையும் தந்திடனும்!
உன் நீதி முன் செல்லும்
மகிமை சூழ்ந்திடும்.
ஜெபிக்கும் போதெல்லாம்
கர்த்தர் பதிலைத் தந்திடுவார். – அதிகாலை
3. பரிசுத்த நாளாகிய
கர்த்தரின் நாளிலே,
இஷ்டம் போல் நடவாமல்,
அதை மகிமையாய் எண்ணினால்,
கர்த்தரில் மகிழுவாய்,
பூமியில் உயருவாய்;
யாக்கோபின் சுதந்தரம்
உன்னை போஷிக்கும்! -அதிகாலை