athikalaiyil keethangkal pati

அதிகாலையில் கீதங்கள் பாடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

அதிகாலையில் கீதங்கள் பாடி
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
மரித்தவர் உயிர்த்தெழுந்தாரே
ஜெயம், ஜெயம் என்று பாடிடுவோம்.
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அன்பால் தன் ஜீவன் தந்தாரே
பரலோகம் சென்று எனக்காய் ஒரு இடத்தை
ஆயத்த படுத்தினாரே. (2)
கண்ணீருடன் வந்த பெண்கள்
தூதனை கண்டனரே
இயேசு உயிர்த்தெழுந்த செய்தி – கேட்டு
மகிழ்வுடன் விரைந்தனரே.
சீஷர்கள் வீட்டின் அறையில்
பயத்துடன் வாழ்ந்தனரே
அவர்களின் மத்தியில் இயேசு
வந்து சமாதானம் என்றுரைத்தாரே.
பாதாளம் உன் ஜெயம் எங்கே
மரணம் உன் கூர் எங்கே
என் இயேசு மகா ராஜன்
உன் மேல் வெற்றி சிறந்தாரே.
அதிகாலையில் கீதங்கள் பாடி பாடல் வரிகள், Adhikaalayil Geethangal Paadi Lyrics