Athisayamaga Nadathina Lyrics

அதிசயமாக நடத்தின

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிசயமாக நடத்தின தேவன்
இனியும் நம்மை நடத்திடுவார் -2
மரண இருளிலும் பள்ளத்தாக்கிலும்
தோள்களில் ஏந்தி சுமந்திடுவார் -2
நன்றி நிறைந்து பாடிடுவேன்
நல்லவர் நல்லவரே -2
கண்ணின் மணிபோல காப்பவரே
நல்லவர் நல்லவரே -2
1. செங்கடல் எனக்கு முன்பாய்
எதிரிட்டு நின்றாலும்
யோர்தான் எனக்கு முன்பாய்
கரைபுரண்டோடினாலும் -2
வழி திறக்கும் நான் முன்னேறுவேன்
கர்த்தர் முன் செல்கிறார்-2
2. வனாந்திர பாதையிலே
எனக்காய் வழி திறப்பார்
வலக்கரம் பிடித்து என்னை
வழுவாமல் காத்திடுவார்
மேகஸ்தம்பமாய் அக்கினி
ஸ்தம்பமாய் கூடவே நடந்திடுவார்