Aththi Maram pol Lyrics

அத்தி மரம் போல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அத்தி மரம் போல் எத்தனை
பேர்கள் வாழ்கின்றனர்
தினம் அர்த்தமில்லாமல்
கர்த்தரில்லாமல் வாழ்கின்றார் – ஆ ஆ (4)
1. பார்க்கப்பார்க்க ஆழகாய் இருந்தது அத்தி மரம்
இயேசு ஆசையோடு கனியை தேடினார் ஏமாற்றம்
இப்படித்தானே மனிதர்கள் வாழும் வாழ்க்கை பல வேஷம்-ஆ
2. மனிதனை நீ நம்புவதாலே பலனில்லை
ஆனால் இறைவனை மட்டும் நம்பிடுவாயே துன்பமில்லை கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார் கவலைகள் எல்லாம் தீர்த்திடுவார்
3. ஊருக்குள்ளே உத்தமராக நடிப்பார்கள்
ஆனால் உண்மையில் அவர்கள் அத்திமரம் போல் இருப்பார்கள் பேசுவதெல்லாம் வேதங்கள் போடுவதெல்லாம் வேஷங்கள்
4.ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை
ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை
க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார் க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்