atiyoor yam tharum kanikkaiyai – Adiyor Yaam Tharum Kaanikaiyai

அடியோர் யாம் தரும் காணிக்கையை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அடியோர் யாம் தரும் காணிக்கையை – Adiyor Yaam Tharum Kaanikaiyai
அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே
பாவியென்றெம்மைப் பாராமல் – எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல்
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் தருகின்றோம்