avar kaikalil varaiyappatta en uruvam

அவர் கைகளில் வரையப்பட்ட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் கைகளில் வரையப்பட்ட என் உருவம்
என்றென்றும் சிதையாமல் நிலைத்திருக்கும்
அவர் நெஞ்சில் பொறிக்கப்பட்ட என் பெயரும்
என்றென்றும் அழியாமல் நிலை நிற்கும்
கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர்
என் தேவன் நான் நம்பும் துருகமும் அவரே
என் கேடகம் என் உயர்ந்த அடைக்கலமும் அவரே
ஈட்டியினால் துளையுண்ட நெஞ்சினின்று
பாசமென்னும் பெருவெள்ளம் பாய்ந்து வர
ஆணிகளால் அறையுண்ட அவர் கரத்தால்
பாவியென்னை அன்புடனே அரவணைத்தார்
அனுதினமும் அவர் சமுகம் எனை நடத்த
அவர் சொற்கள் என் உள்ளில் நிலைத்திருக்கும்
முடிவுவரை அவ்வுறுதி நீங்காமல்
எனைத்தாங்கி மகிழ்ச்சியினால் நிறைத்திடு மே
விண்ணுலகில் வாழுகின்ற தூதர் குழாம்
களிகூர்ந்து இடைவிடாமல் துதிபாடும்
அத்தூதர் பெற்றிடாத மேன்மைகளை
நான் பெற்றேன் அவர் கிருபை போற்றிடுவேன்