Avar Sonnadhai Seidhar

அவர் சொன்னதை செய்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

அவர் சொன்னதை செய்தார்
சொல்லி முடித்தார்
சோர்ந்து நீ போகாதே
அவர் உயிருடன் எழுந்தார்
மரணத்தை ஜெயித்தார்
உயர்த்துவார் நிச்சயமாய் (2)
1. காலியான கல்லறை எருசலேமில
மரித்தவர் மத்தியில் இயேசுவே இல்ல 2
கல்லறை கல்லு புரண்டு போச்சு
மரணம் வீக்னஸ் ஆச்சு
அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தாரே 2
2. இயேசு பெயரை சொன்னால் பேய்கள் பயந்து ஓடுது
வியாதி சாபம் வறுமை எல்லாம் நீங்கி போகுது 2
இயேசு பெயரை சொன்னா மாஸ்சு
இதை ஊரெல்லாம் பேசு
அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தாரே 2
பாவத்தை போக்க பிறந்தாரு
பாவி என்னை மாற்றினாரு
பாசம் என் மேல வச்சாரு
பழைய பாவம் நீக்கினாரு
பகையா நின்ற மரணத்தை
சிலுவையில உடைச்சாரு
பாவம் போச்சு , சாபம் போச்சு
வாழ்க்கையே புதுசு ஆச்சு