Avarai Ninaithukol Lyrics

அவரை நினைத்துக்கொள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழிகளில் அவரை நினைத்துக்கொள்
உன் பாதை செவ்வையாகும்
மனதிலே அவரை விதைத்துக்கொள்
முன் சென்றிடு-2
மனிதர்கள் உன்னை தூக்கி எறிந்தாலும்
நீ எனக்கு தேவை என்று சொன்னாரே
வழியில்லா இடத்தில் வழி உண்டாக்குவார்
அவர் வார்த்தை ஒழியாது
அதிசயம் காணுவேன் இன்றே! இன்றே
நம்பிக்கை இழந்து சோர்ந்து போனாலும்
அவர் உன்னை தேற்றுவாரே
உன் இருதயத்தின் விருப்பமெல்லாம்
நிறைவேற்றுவார்-2
தலை குனிந்து நீயும் உடைந்து போனாயோ
தலைநிமிர செய்கிற தேவன் உனக்குண்டு-வழி
வழியுண்டாக்குவார்-2
அவரை நினைத்துக்கொள்.