Ayirakanakkana Varudangalai

ஆயிரக்கணக்கான வருடங்களாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs and Roman Catholic Songs collection.

1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்
யேசு ரட்சகரே எழுந்தருளும்.
ஓசன்னா தாவீதின் புதல்வா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மா
யோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தில் உதித்தவரே எம்
மன்னவரே எழுந்தருள்வீரே.
3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு
கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை
நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர்.
4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் – முடம்
கூன், செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அநேகர் நலம் பெற்றார் – எம் கடவுளே
எம்மோடு வருவீரே.
5.யூதேயா நாட்டில் மகிழ் பெற்றீர் எம்
யூத ராஜா என்று முடி பெற்றீர்
எருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் எம்
யேசு ரட்சகரே அரசாள்வீர்.
6.பாவிகளைத் தேடிவந்தவரே -எம்
பாவங்களைப் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே -எம்
பராபரனே உட்செல்வீரே.
7.கோவேறு குட்டியே ஆசனமாய் – எம்
குழந்தையின் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக்கொடியாய்- எம்
கர்த்தனே சீக்கிரம் நடப்பீரே.
8.உலகமே உமது அரிய வேலை எம்
உயிருமே உமது மாபுதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே – எம்
உலகரசே உட்புகுவீரே.