Azhage En Yesuvae

அழகே என் ஏசுவே உயிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகே என் ஏசுவே
அழகே என் ஏசுவே
உயிரே என் சுவாசமே
உயிரே என் ஏசுவே
1. அமுதே உம்மை துதித்திடுவேன்
தேனிலும் இனிமையாய்
தெவிட்டாமல் சுவைத்தருமே
தித்திக்கும் உம் நாமமே
2. சதா காலமும் வாழ்பவரே
சகலத்தை படைத்தவரே
சர்வலோகையும் ஆழ்பவரே
அடியேனை நேசித்தீரே
3. பதினாயிரம் பேரில் சிறந்தோர்
பாவமெல்லாம் நீர் சுமந்தீர்
பரலோகத்தில் பெயர் எழுத
பரிகார பலியானீர்
4. எனக்காகவே அடிக்கப்பட்டீர்
அழகெல்லாம் நீர் துறந்தீர்
என் பாவங்கள் யாவும் சுமந்தீர்
இரத்தம் சிந்தி நீர் மரித்தீர்