Azhagoviyamai Ozhi oorvalamaai

அழகோவியமாய் ஒளி ஊர்வலமாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகோவியமாய் ஒளி ஊர்வலமாய் அழகழகழகாய் வானில் ஒளி நகரா?
அன்பரேசுவே உள்ளம் நிறைந்திடுதே அல்லேலூயா பாடுவேன் அங்கே என்னை அழைத்து செல்வீரே தொழுதே அழுதிடுவேன்
நேசர் வருவார் விரைவில் வருவார் நானும் பறப்பேன் வேகமே
அந்த நாளை எண்ணிடும் பொழுதில்
ஆசைகள் அடங்காதே நேசரேசுவை பார்த்திட கண்கள் கோடிகள் போதாதே
1. பாவம் மரணமில்லை துன்பம் துயரமில்லை நோயின் கொடுமையில்லை குறை ஏதுமில்லை வஞ்சம் இல்லா நெஞ்சம் கொஞ்ச தேவனை தொழுதிடுவேன் பஞ்சம் இன்றி அன்பரின் அன்பை அள்ளிப் பருக்கிடுவேன்.
2. தூதர் சேவை உண்டு சூடக் கிரீடமுண்டு சுத்தர் கூட்டமுண்டு தீரா இப்பமுண்டு நித்ய நித்ய காலம் நான் வசிக்கும் ஜீவனின் தேசமது சத்ய தேவன் மனிதருள் வசிக்கும் அதிசயக் காலமது.
Azhagoviyamai Ozhi Oorvalamaai Lyrics in English