Azhagu azhagu

அழகு அழகு ஆஹா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகு அழகு ஆஹா என்ன அழகு
பதினாயிரங்களில் சிறந்த அழகு
அழகு அழகு ஆஹா என்ன அழகு
இப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு
வெண்புறா கண்கள்
பனிமலை கன்னங்கள்
மரியின் மடியில் மாணிக்கம்
கண்ட மனம் பூரிக்கும்
1.சாஸ்திரிகளின் தாகம்
மேய்ப்பர்கள் ஏக்கம்
மானிடத்தின் விருப்பம்
மன்னவனை பார்க்கணும் -வெண்புறா
2.இயேசு பிறந்த கதை
மண்ணிற்கு கவிதை
பூமியில் விதைத்த விதை
பரலோகத்தின் பாதை -வெண்புறா