azhaikkirar iyesu unnai

அழைக்கிறர் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைக்கிறார் இயேசு உன்னை
யுத்தம் செய்ய அழைக்கிறார்
அழைக்கிறார் மீட்பர் உன்னை
இரத்தம் சிந்த அழைக்கிறார்
மரணமோ ஜீவனோ நாசமோ மோசமோ
பட்டயமோ பட்டினியோ ஒன்றும் செய்யாதே
துன்பமோ தொல்லையோ ஆளுகையோ வல்லமையோ
நடப்பதோ வருவதோ அன்பை மாற்றாதோ
தலைமுடிக்கு கணக்கு வைக்கும் தேவன் அவர்
கண்மணிபோல் கருத்துடனே காத்திடுவார்
இரத்தசாட்சி ஸ்தேவானைப் போல் உன்னையவர்
முற்றும் மாற்ற இன்று உன்னை அழைக்கிறார்
திறப்பின் வாசலில் நிற்கத்தக்க மனிதன் யாரே?
என்று தேடும் தேவனை நீ சந்திப்பாயா?
என் காரியம் நிறைவேறச் செல்பவன் யார்?
என்று கேட்கும் தேவன் உன்னை அழைக்கிறார்
நல்ல போர்ச் சேவகனாய் தீங்கடைய
நல்ல ஓர் போராட்டம் நடத்திடே
ஓட்டம் முடித்து நற்பரிசாம் நித்திய
ஜீவ கிரீடம் பெற்றிடவே அழைக்கிறார்