azhaikkum iraivan kural ketpoom – un

அழைக்கும் இறைவன் குரல்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அழைக்கும் இறைவன் குரல் கேட்போம் – உன்
அழைப்பினை ஏற்றுப் பின் தொடர்வோம்
1. அழைப்பை ஏற்று விரைகின்றோம்
அருளால் நிறைந்து வாழ வைப்பாய் – 2
தனக்கென வாழா பணியேற்போம் – 2
பிறர்கென வாழும் வரம் நல்கிடுவாய்
2. தகுதியில்லாத எமை ஏனோ
இறைவா விரும்பி அழைத்தாயே – 2
உனக்கென உள்ளத்தை அளிக்கின்றோம் – 2
உறவென உனையாம் அடையசெய்திடுவாய்