azhaiththavare unmaiyullavar – Azhaithavare Unmaiullavar

அழைத்தவரே உண்மையுள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைத்தவரே உண்மையுள்ளவர் – Azhaithavare Unmaiullavar
அழைத்தவரே உண்மையுள்ளவர்
அனுதினம் நடத்திடுவார்
கைவிடாமல் விட்டுவிலகிடாமல்
கண்மணி போல் காப்பார்-2
1. மனிதனின் வாக்கு மாறினாலும்
அழைத்தவர் என்றும் மாறிடாரே -2
ஆபிரகாமின் தேவன் என்னோடுண்டு
வாக்குத்தத்தம் என்றும் நிறைவேற்றுவார்.-2
-அழைத்தவரே…
2.பார்வோனின் சேனை தொடர்ந்தாலும்
செங்கடல் முன்னே நின்றாலும்-2
முட்செடியில் தோன்றினவர்
நான் போகும் பாதையை உருவாக்குவார்.-2
-அழைத்தவரே…
3.சொந்தங்கள் உன்னை ஒடுக்கினரோ
சுற்றத்தார் உன்னை தூற்றினரோ-2
சேனையின் கர்த்தர் உன்பட்சத்தில்
உன் பேரைப் பெருமைப்படுத்திடுவார்-2
-அழைத்தவரே