azhakazhakana anpus seyalal akilam iyakkum anparkale – 2

அழகழகான அன்பு செயலால்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அழகழகான அன்புச் செயலால் அகிலம் இயக்கும் அன்பர்களே – 2
நம் அன்றாட வாழ்வை கொண்டாடி மகிழ மன்றாட வருகையின் நேரமத்தில் – 2
வருக வருகவே வரங்கள் பெருகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
அழகழகான அன்புச் செயலால் அகிலம் இயக்கும் அன்பர்களே
1. கடவுளின் அன்புப் பிள்ளைகள் நாம் கணமும் மறவோம் நம் வாழ்வில்
உடனுள்ள யாவரும் நம் உறவே – 2
உயிருள்ள வரையில் இதை நினைப்போம் – 2
வாழ்வென்னும் தேடலில் நல்லன செய்கையில்
வாழ்விக்கும் இறைவனும் நம்முடன் இணைகிறார் – 3
வருக வருகவே வரங்கள் பெருகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
அழகழகான அன்புச் செயலால் அகிலம் இயக்கும் அன்பர்களே
2. சாதியும் சமயமும் நமக்கில்லை சமத்துவம் ஒன்றே நம் கொள்கை
நீதியும் நேயமும் நெஞ்சினிலே நிதமும் சுமந்தே சுடராவோம் – 2
வீழ்த்திடும் மனிதத்தைத் தாங்கிடும் பணிகளில்
விடுவிக்கும் சக்தியாய் இறைவனும் எழுகிறார் – 3
அழகழகான அன்புச் செயலால் அகிலம் இயக்கும் அன்பர்களே
நம் அன்றாட வாழ்வை கொண்டாடி மகிழ மன்றாட வருகையின் நேரமதில்
வருக வருகவே வரங்கள் பெருகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
அழகழகான அன்புச் செயலால் அகிலம் இயக்கும் அன்பர்களே
Tamil Mass RC christian song with lyrics அழகழகான அன்பு செயலால் Alagalakana Anbu Seayalal வருகைப் பாடல்
பூவுலகெங்கும் அழகழகான – Poovulagengum Azhagazhagaana
பிதா அன்புச் செல்வன் – Pitha Anbu Selvan
Acts-6 – அப்போஸ்தலர்-6
வாருங்கள் அன்பர்களே – Vaarungal Anbargale Lyrics