azhaku nila therile asainthu varum poothile

அழகு நிலா தேரிலே அசைந்து வரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அழகு நிலா தேரிலே அசைந்து வரும் போதிலே
அருள்ளொளியாய் வீசுதே அமைதியிலே பேசுதே – 2
அலை அலையாய் கூடுவோம் அன்னை புகழ் பாடுவோம் – 2
ஆபத்தில் நம்மையே காத்திருப்பார் அன்னையே
1. விடியல் வரும் சேதி தரும் வெள்ளியை போல
இயேசுபிரான் வருகை சொல்லும் புனித வெள்ளியே
விடிந்தவுடன் போய் மறையும் பனித்துளி போல
அவர் வளர தான் குறையும் தெய்வ தாய் மரி
மாசில்லாத உம்மிலே உலகின் ஒளி உதித்ததே
மனுக்குலத்தின் மகிமையே பெண்ணினத்தின் பெருமையே என்னை தாங்கி தினம் வாங்கி தரும் இறையருளே போதுமே
2. அளவில்லாத நன்மைகளை செய்யும் தேவனை
அன்பு செய்ய அறிவதில்லை இந்த மானுடம்
உள்ளமதில் வாழ வரும் உண்மை தேவனை
முழுமனதாய் அன்பு செய்யும் நேசமாமரி
விண்ணவரும் வணங்கிடும் உன்னருமை எண்ணியே
விண்ணகம் போல் தேவனை வியந்து புகழ் பாடுவேன் வரையில்லா அவர் அன்பில் வளர வரம் தாருமே