azhuthitum kuralinai kantar

அழுதிடும் குரலினை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்
அழாதே மகளே என்றார்
ஆறுதல் அகமதில் தந்தார்
அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்.
நெருப்பெரிந்தால் நீர் இறைப்பார்
நெஞ்சம் எரிந்தால் யார் அணைப்பார்
நதியாக நம் இயேசு வருவார்
நெஞ்சத்தை குளிர்ந்திட செய்வார்
ஜீவ நதியாக நம் இயேசு வருவார்
நெஞ்சத்தை குளிர்ந்திட செய்வார் (2)
அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்
வெள்ளம் திரண்டால் அணைக்கட்டு வார்
உள்ளம் திகைத்தாள் யார் தேற்றுவார்
கலங்காதே நம் கர்த்தர் வருவார்
கண்ணீரைத் துடைப்பார் காத்திடுவார் (2) அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்.
காற்றடித்தால் கரை தேடுவார்
புயல் சூழ்ந்தால் யாரை தேடுவார்
திகையாதே தினம் தேவன் வருவார்
திசைகாட்டி வழி காட்டுவார் (2)
அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்
அழாதே மகளே என்றார்
ஆறுதல் அகமதில் தந்தார்
அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்.