Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

பலிபீடமே பலிபீடமே
கர்த்தரின் பலிபீடமே
எரியட்டுமே எரியட்டுமே
பரிசுத்த அக்கினியே-2
எங்கள் தேசம் மறுரூபமாகனுமே
எங்கள் சபைகள் உயிர்பெற்று எழும்பனுமே
அந்த பாகாலின் பலிபீடம் அழியனுமே
எங்கள் தேசத்தின் தீட்டெல்லாம் எரியனுமே
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்-2
எங்கும் முழங்கனுமே
உயிர்பெற்று எழும்பனுமே-2
ஹாலேலூயா ஹாலேலூயா-4
1.பின்மாரி மழைக்காக வேண்டிடுவோம்
ஆசீர்வாத மழை பொழிந்திடுவார்
இரட்சிப்பின் சந்தோஷத்தால் மகிழ்வோம்
பாக்கியமாம் சுவிசேஷத்தை சொல்லுவோம்
நான்கு திசையெங்கும் பறைசாற்றுவோம்
இயேசுவே மெய்யான தெய்வம் என்று -2 – கர்த்தரே தெய்வம்
2.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்
பூரண இரட்சிப்பை நிறைவேற்றுவோம்
காலம் கொடியதாய் வருகின்றதே
இயேசுவை அண்டி நாம் நடந்திடுவோம்
கோடான கோடி மக்கள் இங்கே
நரகத்தின் பாதையில் செல்கின்றாரே
அவர்களின் மீட்புக்காய் போராடுவோம்
இயேசுவே வழி என்று சொல்லிடுவோம் – கர்த்தரே தெய்வம்
3.பூரண கிருபையை பெற்றிடுவோம்
குறைவின்றி கிருபையால் வாழ்ந்திடுவோம்
ஆவியின் வரங்களை பெற்றிடுவோம்
கிறிஸ்துவின் சபையாம் நாம் அலங்கரிப்போம்
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோம்
மறுரூபமாகி நாம் சென்றிடுவோம்
இராஜாதி இராஜவாம் இயேசுவையே
மகிமையிலே நாம் தரிசிப்போமே – கர்த்தரே தெய்வம்