Bayemellaam Mattrum Lyrics

பயமெல்லாம் மாற்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயமெல்லாம் மாற்றும் என் தேவன் நீர்
குறைவுகளை நிறைவாக மாற்றுபவர் நீர் – (2)
கண்ணீரைக் கண்ட எல் ரோய் நீர்
கண்ணீர் துடைத்த என் தகப்பன் நீர் – (2)
ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா
ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா
1.கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
பகலும் இரவாக மாறிய தருணம் – (2)
அழுகையின் சத்தத்தைக் கேட்டீரையா
அன்போடு அணைத்துக் கொண்டீரையா – (2) – ஹல்லேலூயா
2.கால்கள் தள்ளாடி நான் நடந்த வேளையில்
சோர்வுற்று நானும் உடைந்த வேளையில் – (2)
அணைத்தீர் என்னை உம் கரத்திலே
இரு பரிவாரம் எனக்குத் தந்தீரே – (2) – ஹல்லேலூயா