Belanatru Kidanthaen Belanai

பெலனற்று கிடந்தேன் பெலனாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Scale – C min
பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்
சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்
தகப்பனை போல் என்னை தோளில் சுமந்து
உம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர்
என்னை அறிந்தவரே முன் குறித்தவரே
உம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன்
மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்
சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்
கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே)
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்
நான் அதை செய்வேன் என்று வாக்குறைத்தீர் – (என்னை அறிந்தவரே)